தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படமான பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவு

சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படமான பாக்கெட் நாவல் படப்பிடிப்பு முடிவடைந்தது. இது குறித்த புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Team Clapnumber · 2 min read
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படமான பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவு

சூப்பர் டீலக்ஸ் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படமான பாக்கெட் நாவல் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படக்குழுவினர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை உள்ளடக்கிய புரோமோ வீடியோவை விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் விஜய் சேதுபதியுடன் நடிகை மாளவிகா மோகனன், வில்லனாக நடிக்கும் ராஜ் பி ஷெட்டி மற்றும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வதந்தி வெப் தொடரை உருவாக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். மாடர்ன் லவ் சென்னை படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து இளையராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் பேனரின் கீழ் எஸ்.டி. எழில்மதியுடன் இணைந்து தியாகராஜன் குமாரராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார். எழில்மதி இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இவர்கள் கூட்டணியில் 2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பல கதைகளை உள்ளடக்கிய அந்த ஹைப்பர்லிங்க் டிராமாவில், திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். சமந்தா, ஃபஹத் ஃபாசில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் காமெடி டிராமாவான பத்மா வெளியானது. தற்போது ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு மற்றும் இஞ்சி வெள்ளம் உள்ளிட்ட படங்கள் இவரது கைவசம் உள்ளன.

In this story

Topics

Read next

All news ›

The talk

0 · moderated
Sign in to join the talk

Be the first to clap back.